விவிலிய போட்டிகள் 2026 போட்டி விவரங்கள்
1
விவிலிய வினாடி வினா
Bible Quiz
  • வகுப்புகள் 6–8: யோவான் முழுவதும்
  • வகுப்புகள் 9–12: எபிரேயர் முழுவதும்
2
ஓவியப் போட்டி
Drawing Competition
  • வகுப்புகள் LKG-2: வண்ணம் தீட்டுதல்
  • வகுப்புகள் 3-5: திருவுடல் திருஇரத்தம்
  • வகுப்புகள் 6-8: நல்ல ஆயன் நானே
  • வகுப்புகள் 9-12: கானா ஊர்த் திருமணம்
வரைவதற்கான ஓவியத்தாள் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான பொருள்களைப் பங்கேற்பாளர்களே கொண்டு வர வேண்டும்.
3
மனப்பாடப் போட்டி
Memory Competition
  • வகுப்புகள் 1-3: திருப்பாடல் 120
  • வகுப்புகள் 4-5: எசாயா 55:4-10
  • வகுப்புகள் 6-8: திருப்பாடல் 136:1-10
  • வகுப்புகள் 9-12: லூக்கா 1:45-50
ஆங்கிலத்தில் மனனம் செய்பவர்கள் தங்களின் ஆங்கில விவிலியத்தைக் கொண்டு வர வேண்டும்.
5
கதை சொல்லுதல் போட்டி
Story Telling
  • வகுப்புகள் 1-2: கடவுளின் ஆறு நாள்கள் படைப்பு
  • வகுப்புகள் 3-5: நோவா தாத்தா கதை
  • வகுப்புகள் 6-8: புனித தொன் போஸ்கோவின் வாழ்க்கை வரலாறு
  • வகுப்புகள் 9-12: இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை
கால அளவு: 2–3 நிமிடங்கள்
6
பாடல் போட்டி
Singing
  • வகுப்புகள் 1-3: நன்றிப் பாடல்கள்
  • வகுப்புகள் 4-7: அன்னை மரியாள் பாடல்கள்
  • வகுப்புகள் 8-12: புனிதர்களின் பாடல்கள்
பல்லவியோடு ஒரு சரணம் மட்டுமே பாட வேண்டும்.
7
குழு பாடல் போட்டி
Group Singing
  • கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.
  • 5 நிமிடங்களுக்கு மிகாமல் பாடல் பாட வேண்டும்.
  • ஒரு குழுவில் 3 முதல் 10 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • இசைக் கருவிகள் கட்டாயமில்லை.
  • ஒரு பங்கிலிருந்து எத்தனைக் குழுக்கள் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். ஒரே பங்கேற்பாளர் மற்றொரு பாடற்குழுவில் இடம்பெறக் கூடாது.
8
குழு நடனப் போட்டி
Group Dance
  • கிறிஸ்தவப் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆட வேண்டும்.
  • நடனம் 5 நிமிடங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.
  • ஒரு குழுவில் 3 முதல் 10 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • ஒரு பங்கிலிருந்து எத்தனைக் குழுக்கள் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். ஒரே பங்கேற்பாளர் மற்றொரு நடனக் குழுவில் இடம்பெறக் கூடாது.
9
புகைப்படப் போட்டி
Photography Contest
  • வழங்கப்படும் பொருள்களைக் கொண்டு சிறந்ததொரு காட்சியை உருவாக்க வேண்டும்.
  • எடுக்கும் புகைப்படம் ஏதேனும் ஒரு இறைவசனத்தோடு பொருந்தி அமைதல் வேண்டும்.
  • புகைப்படம் எடுக்க கேமரா கட்டாயமில்லை; கைபேசியே போதுமானது.
  • உங்களின் படைப்பாற்றலைப் பொறுத்தே பரிசு வழங்கப்படும்.
  • கால அளவு: 2 நிமிடங்கள்

General Instructions for Participants

  1. Participants must register online exclusively through the website www.dbkm.johnboscochurch.com . The last date for registration is 16-07-2026.
  2. The total registration fee per participant is just ₹50. By paying this one-time fee, an individual can participate in any number of competitions.
  3. Competitions are open not only to catechism students from LKG to 12th standard but also to everyone above 18 years of age.
  4. ID cards will be provided to all registered participants. They will be permitted to participate in the competitions only upon presenting their ID card.
  5. Sunday Mass will be celebrated at 8:30 AM on the day of the competition. Those interested may attend the Mass.
  6. The competitions will begin at 9:30 AM. Therefore, participants are requested to arrive at the church premises on time.
  7. The Bible Quiz competition will be held first. Once it concludes in 30 minutes, all other competitions will commence simultaneously. After completing one competition, participants can join any other competition of their choice.
  8. Lunch will be provided for all participants.
  9. Following the lunch break, the dance competition will take place. This will be followed by the prize distribution ceremony for the winners.
  10. For further details and any queries regarding the competitions, please contact us.

பங்கேற்பாளர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்

  1. பங்கேற்பாளர்கள் www.dbkm.johnboscochurch.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவிற்கான கடைசி நாள்: 16-07-2026.
  2. ஒரு பங்கேற்பாளருக்கான மொத்த பதிவுக் கட்டணம் ₹50 மட்டுமே. இக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தியே, ஒருவர் எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
  3. LKG முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மறைக்கல்வி மாணவர்களுக்கு மட்டுமன்றி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் போட்டிகள் உள்ளன.
  4. முன்பதிவு செய்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அதனைக் காண்பித்த பின்னரே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
  5. போட்டி நடைபெறும் நாளன்று காலை 8.30 மணியளவில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்படும். விருப்பமுள்ளவர்கள் திருப்பலியில் கலந்துகொள்ளலாம்.
  6. காலை 9.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கும். எனவே, பங்கேற்பாளர்கள் உரிய நேரத்தில் ஆலய வளாகத்திற்கு வருகைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  7. முதலில் விவிலிய வினாவிடைப் போட்டி நடைபெறும். அது 30 நிமிடங்களில் நிறைவடைந்தவுடன் மற்ற அனைத்துப் போட்டிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும். ஒரு போட்டியில் பங்கேற்று முடித்த பின்னர், போட்டியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேறு எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.
  8. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
  9. உணவு இடைவேளையைத் தொடர்ந்து, நடனப்போட்டி நடைபெறும். அதன் பின்னர் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறும்.
  10. போட்டிகள் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஐயங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Register for Bible Competitions 2026

Register Now

The total registration fee of ₹50 has to be paid on the day of the event during check-in. Participants can participate in any number of events with the same ₹50 registration fee.
✅ Registration Submitted Successfully
Thank you for registering for Bible Competitions 2026.

Join our official WhatsApp group for event updates and announcements.
Join WhatsApp Group

Contact Us for Clarification

Nithin
63793 62344
Allwin
63824 13273
Jerald
77082 69893
Joseph Gowthaman
80567 13132

புனித ஜான் போஸ்கோவை நோக்கி மன்றாட்டு

புனித ஜான் போஸ்கோவே! உம்மைப் போற்றுகிறேன். இறைவனின் பராமரிப்பில் பெரும் நம்பிக்கைக் கொண்டவரே! இளம் வயதினருக்காக இவ்வுலகில் உமக்கு நேரிட்ட சோதனைகளையும் வேதனைகளையும் கிறிஸ்தவர்களுக்குச் சகாயம் செய்யும் அன்னையில் பரிந்துரையால் வென்றவரே! ஆன்ம அருட்கொடைகளோடு இவ்வுலகத் தேவைகளுக்காகவும் சிறப்பாக (உங்கள் கருத்தைக் குறிப்பிடவும்) இந்த கருத்துகளுக்காகவும் உமது பரிந்துரையை நாடுகிறேன். நான் வேண்டும் வரத்தையும் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து வாழும் அருளையும் அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கைக் கொண்ட அன்னை மரியாள் வழியாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தர உம்மை வேண்டி மன்றாடுகின்றோம். ஆமென்.

திருப்பலிபீடத்தில் பணி செய்வது, இயேசுவிடம் நெருக்கமாகச் செல்லும் ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.

– திருத்தந்தை பிரான்சிஸ்.

இணையத்தில் இறைப்பணி

ஒளியின் விதை மின்னிதழை மாதம்தோறும் வாசியுங்கள்!