Scroll down for Registration Form

புனித ஜான் போஸ்கோவே! உம்மைப் போற்றுகிறேன். இறைவனின் பராமரிப்பில் பெரும் நம்பிக்கைக் கொண்டவரே! இளம் வயதினருக்காக இவ்வுலகில் உமக்கு நேரிட்ட சோதனைகளையும் வேதனைகளையும் கிறிஸ்தவர்களுக்குச் சகாயம் செய்யும் அன்னையில் பரிந்துரையால் வென்றவரே! ஆன்ம அருட்கொடைகளோடு இவ்வுலகத் தேவைகளுக்காகவும் சிறப்பாக (உங்கள் கருத்தைக் குறிப்பிடவும்) இந்த கருத்துகளுக்காகவும் உமது பரிந்துரையை நாடுகிறேன். நான் வேண்டும் வரத்தையும் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து வாழும் அருளையும் அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கைக் கொண்ட அன்னை மரியாள் வழியாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தர உம்மை வேண்டி மன்றாடுகின்றோம். ஆமென்.
– திருத்தந்தை பிரான்சிஸ்.
